1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 26 ஜனவரி 2015 (18:51 IST)

பாக்ஸ் ஆபிஸ் - அமர்க்களமான வசூலுடன் முதலிடத்தில் ஐ

சென்னை பாக்ஸ் ஆபிஸில் டார்லிங், ஆம்பள, ஐ ஆகிய மூன்று படங்களும் நல்ல வசூலுடன் ஓடுகின்றன. மற்ற படங்கள் சில ஆயிரங்களுடன் ஒதுங்கிக் கொள்ள இந்த மூன்று படங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.
3வது  இடத்தில் ஆம்பள. சென்ற வார இறுதியில் இப்படம் 28.9 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.23 கோடி.
காமெடி பேய் படத்துக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருக்கிறது. டார்லிங் சென்ற வார இறுதியில் 32.7 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் சென்னை மாநகர வசூல் 73 லட்சங்கள்.
 
மேலும் அடுத்த பக்கம்...

முதலிடத்தில் ஐ. தமிழகத்தில் ஐ படம் கத்தி வசூலை நெருங்குகிறது. சென்னையை பொறுத்தவரை மெகா வசூல். சென்ற வார இறுதியில் 1.5 கோடியை வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இதுவரை இதன் சென்னை வசூல் 6.9 கோடிகள். இது சென்ற வருடம் வெளியான வேலையில்லா பட்டதாரி, லிங்கா வசூலைவிட அதிகம். கத்தியின் வசூலை எட்ட ஐ -க்கு இனி ஒரு கோடி மட்டுமே தேவை.