வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : திங்கள், 21 ஜூலை 2014 (17:04 IST)

சென்னை பாக்ஸ் ஆஃபி‌ஸ் - கோச்சடையானை நெருங்கிய வேலையில்லா பட்டதாரி

5. ராமானுஜன்
இந்த வார சென்னை மாநகர் பாக்ஸ் ஆபிஸில் ஐந்தாவது இடத்தில் ராமானுஜன். சென்ற வார இறுதியில் (ஜூலை 18 முதல் 20 தேதி வரை) இப்படம் சென்னையில் சிட்டியில் 83 ஆயிரங்களை தனதாக்கியுள்ளது. இதுவரையான கலெக்ஷன் 11.6 லட்சங்கள்.
 

4. இருக்கு ஆனா இல்ல
காமெடி ஹாரர் படமான இது சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் கலெக்ஷன் 1.9 லட்சங்கள். மிக மோசமான ஓபனிங்.
 

3. அரிமா நம்பி
விக்ரம் பிரபு நடித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 8.8 லட்சங்களை தனதாக்கியுள்ளது. இதுவரையான இதன் சென்னை சிட்டி கலெக்ஷன் 2.36 கோடிகள். 
 

2. சதுரங்க வேட்டை
சென்ற வாரம் வெளியான படம் திருப்பதி பிரதர்ஸின் அதீத விளம்பரங்களுக்குப் பிறகும் முதல் மூன்று தினங்களில் 28.3 லட்சங்களை மட்டுமே தனதாக்கியுள்ளது.
 

1. வேலையில்லா பட்டதாரி
முதல் இடத்தில் தனுஷ் படம். தனுஷின் மார்க்கெட் அவ்வளவுதான் என்றவர்களின் வாய்களை இந்த வெற்றி பெவிகால் போட்டு ஒட்டியது. முதல் மூன்று தினங்களில் 1.7 கோடியை தனதாக்கி சாதனை படைத்துள்ளது படம். கோச்சடையானின் முதல் மூன்று தின சென்னை கலெக்ஷனுடன் ஒப்பிட்டால் அதைவிட இது சில லட்சங்கள் மட்டுமே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.