Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாய்ப்புதானே விடுங்க போகட்டும்; படுக்கைக்கு நோ சொல்லுங்க; தனுஷ் தோழி

Swara Baskar
Abimukatheesh| Last Updated: வியாழன், 9 நவம்பர் 2017 (16:01 IST)
பட வாய்ப்பு போனால் போகட்டும், படுக்கைக்கு செல்லாதீர்கள் என நடிகைகளுக்கு ஸ்வாரா பாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.

 

 
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என பாலிவுட், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நடிகைகள் கூறிவருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர் நடிகைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளர். இவர் தனுஷ் பாலிவுட்டில் நடித்த அம்பிகாபதி படத்தில் தனுஷ்க்கு தோழியாக நடித்தவர்.
 
இந்நிலையில் இவர் கூறியதாவது:-
 
நான் நடிக்க வந்த புதிதில் அவுட்டோர் ஷூட்டிங்கின் போது இயக்குநர் ஒருவர் எனக்கு தொல்லை கொடுத்தார். ஒருநாள் இரவு குடித்துவிட்டு என் அறைக்கு வந்து கட்டிப்பிடிக்குமாறு தொல்லை கொடுத்தார். அவருக்கு பயந்து என் அறையில் உள்ள விளக்குகளை ஆப் செய்துவிடுவேன். விளக்கு எரிந்தால் அவர் வந்துவிடுவாரோ என்ற பயம்தான்.
 
பட வாய்ப்பு போனால் போகட்டும், படுக்கைக்கு செல்ல வேண்டாம் என்பதே என் அறிவுரை என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :