வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2015 (09:04 IST)

செட்டிநாட்டு அரண்மனையில் கபாலி படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு - போலீஸில் புகார்

ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாட்டு அரண்மனையில் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், போலீஸில் புகாரும் தரப்பட்டுள்ளது.


 

 
கபாலியின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை விமானநிலையத்தில் தொடங்கியது. பிறகு சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் சில காட்சிகளை படமாக்கினர். தற்போது, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாட்டு அரண்மனையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
 
செட்டிநாட்டு அரசர் எம்.ஏ.எம்.ராமசாமிக்கும், அவரது வளர்ப்பு மகன் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அரண்மனையில் தனித்தனியே வசித்து வருகின்றனர். முத்தையாவை மகனாக சுவீகரித்ததை ரத்து செய்ய ராமசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இப்படியொரு இடியாப்ப சிக்கலின் நடுவே ராமசாமி வசிக்கும் பகுதியில் கபாலி படப்பிடிப்பு நடத்த அவர் அனுமதி தந்திருந்தார். அதற்கு வளர்ப்பு மகன் முத்தையா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
 
கபாலி படப்பிடிப்பு நடக்கையில் முத்தையாவின் வழக்கறிஞர்கள் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று சொன்னதுடன், போலீஸிலும் புகார் அளித்தனர். ஆனால், முறைப்படி அனுமதி வாங்கித்தான் படப்பிடிப்பு நடத்துகிறேnம் என கபாலி படக்குழு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தியது.
 
ரஜினியும் இந்த சம்பவத்தின் போது அங்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.