வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 1 மே 2015 (18:34 IST)

’தல’ அஜீத்துக்கு பிரபலங்கள், அரசியல்வாதிகள் பிறந்தநாள் வாழ்த்து

இன்று பிறந்தநாள் காணும் நடிகர் அஜீத் குமாருக்கு பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
 
மே-1ஆம் தேதியை உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் ஒரு விஷேச தினமாக தமிழகத்தின் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவதற்கு ’தல’ என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜீத் குமாரின் பிறந்தநாள் என்பது ஒரு காரணம்.
 

 
இந்நிலையில், இன்று பிறந்தநாள் காணும் நடிகர் அஜீத்துக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா நட்சத்திரங்களும், அரசியல்வாதிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தவர்களை கீழே காணலாம்.
 
நடிகை குஷ்பு: இந்தியாவின் என்னுடைய ஜார்ஜ் குளோனி அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
 
 

 
நடிகர் விக்ரம்: பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜீத் சார்.


 

 
மேலும் அடுத்தப் பக்கம்..
 

நடிகர் ’நான் கடவுள்’ ராஜேந்திரன்: சூப்பர் ஸ்டாரை விட சக்திவாய்ந்த வார்த்தை ’தல’.
 
நடிகை லட்சுமி மேணன்: பிறந்தநாள் வாழ்த்துக்கள் ’தல’ அஜீத் சார். நீங்கள் உண்மையிலேயே தூண்டுதலாகவும், மரியாதைக்குரியவராகவும் இருக்கக் கூடியவர். ’கீப் ராக்கிங்’

நடிகை அஞ்சலி: பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜீத் சார். ஹாவ் ஏ ராக்கிங் யியர்.
 

 
நடிகர் அருண்விஜய்: நான் எப்போதும் பிரமிக்கும் மனிதனான அஜீத் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 
தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன்: நம்முடைய ’தல’க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அஜித் மட்டுமே இந்திய சினிமாவில் புதுமையான பாணியை செய்ய முடியும். கவர்ந்திழுக்கும் தன்மை கொண்ட எளிய மனிதன்.
 

 
மேலும் அடுத்தப் பக்கம்..
 
 

நடிகர் தனுஷ்: பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜீத் சார். அன்பு பரவட்டும்.


 
நடிகை ஆர்த்தி: பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜீத் அண்ணா..கடவுள் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் காப்பாராக.
 
நடிகர் ஆர்யா: இன்று பிறந்தநாள் காணும் உங்களுக்கு நாங்கள் வாழ்த்து சொல்கிறோம்.
 

 
நடிகர் ஜெயம் ரவி: பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜீத் சார். கடவுள் அருளட்டும்.
 
மேலும் பலரும் தொடர்ந்து நடிகர் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

தொகுப்பு: லெனின் அகத்தியநாடன்