மச்சி கடைசி சிங்கிள் காதலர் தினத்த ஜாலியா கொண்டாடிக்கோ டா: ஆர்யாவிற்கு வாழ்த்து சொன்ன நடிகர்

Last Updated: வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:03 IST)
சாயிஷா உடனான தமது காதலை உறுதிப்படுத்திய நடிகர் ஆர்யாவிற்கு ராணா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
நடிகர் ஆர்யாவும் , நடிகை சாயிஷாவும் கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக பணியாற்றியதிலிருந்நு இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. மேலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்தி உண்மையில்லை என்று எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் சாயிஷா உடனான காதலை உறுதி செய்து  விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக ஆர்யா அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். இதனை நடிகை ஆயிஷாவும் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். பெற்றோர்களின் ஆசீர்வாதத்தோடு வருகிற மார்ச் மாதத்தில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம் என தெரிவித்துள்ளார். 
 
இதனைப்பார்த்த ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் ஆர்யாவிற்கு வாழ்த்துக்கள் சொன்ன வண்ணம் இருக்கின்றனர். நடிகரும் ஆர்யாவின் நெருங்கிய நண்பருமான ராணா டகுபதி, மச்சி கடைசி சிங்கிள் காதலர் தினத்த ஜாலியா கொண்டாடிக்கோ டா, வாழ்த்துக்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ஆர்யா ராணாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :