Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பரபரப்பை ஏற்படுத்திய பைரவா பட போஸ்டர்!

Sasikala| Last Updated: புதன், 11 ஜனவரி 2017 (15:09 IST)
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. உலகம்  முழுவதும் 55 நாடுகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் இன்று இரவு ஒரு சில திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

 
பைரவா படத்தின் டிரைலர் பல சாதனைகளை படைத்திருந்த நிலையில் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் மதுரையில் இப்படத்திற்கு பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 
 
அதில் நாளை தமிழகத்தை ஆளப்போவது நாங்க தாண்ட என்பது போல் விஜய் ரசிகர்கள் வசனங்கள் அடங்கிய போஸ்டரை ஒட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததால் 30 சதவீத  கேளிக்கை வரிவிலக்குடன் பைரவா வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :