1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (10:44 IST)

யாரும் தவறவிடக் கூடாத படம் - கார்த்தியின் சிபாரிசு

தனது பிஸி ஷெட்யூல்டில் தாமதமாகதான் சதுரங்க வேட்டை படத்தை பார்த்திருப்பார் போலிருக்கிறது கார்த்தி. படத்தைப் பார்த்தவர், படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னால் படத்தில் வரும் நாயகன் துர்குணங்கள் எதுவுமில்லாதவனாக பார்த்துக் கொண்டார்கள். ஏமாற்றுதல், ரவுடித்தனம் செய்வதெல்லாம் வில்லன். நாயகன் தீமையிலிருந்து சமூகத்தை காப்பவன்.

இன்று அந்த நாயக பிம்பம் மாறிவிட்டது. அன்று வில்லன் செய்த அனைத்தையும் எந்த குற்றவுணர்வும் இல்லாமல் செய்பவனே நாயகன். சதுரங்க வேட்டை படத்தின் நாயகனும் இப்படியொரு ஏமாற்று பேர்வழிதான்.

பிட் அடித்தாவது பாஸாகணும், லஞ்சம் தந்தாவது வேலை வாங்கணும், கள்ள வோட்டு போட்டாவது வெற்றி பெறணும் என்று இன்றைய நுகர்வு உலகு மாறிய பிறகு ஏமாற்றுகிறவர்கள் நாயகனாவதில் ஆச்சரியமில்லை.

புத்திசாலித்தனமான திரைக்கதையால் சதுரங்க வேட்டை அனைவரையும் ஈர்த்தது. படம் பார்த்தேம், ரசித்தோம் என்றில்லாமல் படயூனிட்டை பாராட்டிய கார்த்தி, சதுரங்க வேட்டையை யாரும் பார்க்க தவறாதீர்கள். படத்தை புத்திசாலித்தனமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் எடுத்திருக்கிறார்கள் என்றார்.

தற்போது கார்த்தி குட்டிப்புலி முத்தையாவின் கொம்பன் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.