செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 மே 2018 (07:54 IST)

தூத்துக்குடி கலவரத்தைக் கண்டித்து வீடியோ வெளியிட்ட நடிகை மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி கலவரத்தைக் கண்டித்து, நடிகை நிலானி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் போலீஸார் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 12 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவத்திற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி பலர் தங்களது கண்டணங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து சின்னத்தைரை நடிகை நிலானி, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தூத்துக்குடியில் நடந்தது திட்டமிட்ட படுகொலை என்றும் காவலர் வேடத்தில் நடிப்பது கூட அறுவறுப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கையில் நடத்தப்பட்ட படுகொலை போல், இந்த கூஜா அரசு நம்மையும் கொல்ல நினைக்கின்றனர் என கடுமையாக தமிழக அரசை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் நிலானி.
 
இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிது. இதனால் சென்னை தி.நகர் காவல் நிலையத்தில் நடிகை நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.