Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பச்சோந்தியாக மாறிய தமிழ் சினிமாக்காரர்கள்

Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (12:41 IST)

Widgets Magazine

காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் சினிமாக்காரர்கள் செய்வார்கள் என்ற கூற்று உண்மையாகியிருக்கிறது.


 

 
தமிழை வளர்ப்பதற்காக, ‘தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு’ என அறிவித்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அடுத்து வந்த ஜெயலலிதாவும், அதில் சில திருத்தங்களை மட்டுமே செய்து வரிவிலக்கைக் கடைப்பிடித்தார். எனவே, வரிவிலக்குக்காக எல்லோரும் தமிழில் பெயர்வைக்க ஆரம்பித்தனர். ‘மாஸ்’ படம் ‘மாசு என்ற மாசிலாமணி’யாகவும், ‘பவர் பாண்டி’ படம் ‘ப.பாண்டி’யாகவும் ஆனது.
 
ஆனால், நாடு முழுவதும் ஒரே வரி (ஜி.எஸ்.டி) என்ற முறை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதால், ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போக்கு மறுபடியும் ஆரம்பித்துவிட்டது.
 
அதில், அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர்களும் சேர்ந்திருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. விஜய் படத்துக்கு ‘மெர்சல்’ எனவும், விஜய் சேதுபதி படத்துக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ எனவும் பெயர் வைத்துள்ளனர். ஆக, இத்தனை நாட்களாக வரிவிலக்குக்காக தமிழில் பெயர்வைத்து, இப்போது இல்லை என்றதும் பச்சோந்தியாக மாறிவிட்டனர் சினிமாக்காரர்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

டிசம்பரில் தனிக்கட்சி தொடங்கும் விஷால்?

இப்போதைய நிலவரப்படி, டிசம்பரில் விஷால் தனிக்கட்சி தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை ...

news

சிநேகன், சுஜா இடையே நடந்த போட்டி; கருத்து தெரிவித்த ஆர்த்தி

பிக்பாஸ் வீட்டில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது அதில் “காருக்குள்ள யாரு, கடைசியா பாரு” ...

news

ஒரே ஒரு வார்த்தையால் சென்சாரில் சிக்கிய படம்

ஒரே ஒரு வார்த்தையால் சென்சாரில் சிக்கிய படம், ரிவைஸிங் கமிட்டியால் அப்ரூவல் ...

news

இவரது பிறந்தநாளில்தான் மெர்சல் டீஸர் வெளியாகிறதா?

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி ...

Widgets Magazine Widgets Magazine