வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 30 ஜனவரி 2015 (15:26 IST)

தயாரிப்பாளராகும் கேமராமேன் பி.ஜி.முத்தையா

முன்னணி ஒளிப்பதிவாளரான பி.ஜி.முத்தையா தயாரிப்பாளராகிறார். இவர் தயாரிக்கும் படத்தை உஷா என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.
 
உஷா இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவர் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க மெட்ராஸ் படத்தில் அன்புவாக வந்த கலையரசனை ஒப்பந்தம் செய்துள்ளனர். நாயகி இன்னும் முடிவாகவில்லை.
 
படத்தின் பெயர் மற்றும் பிற விவரங்களை விரைவில் முறைப்படி அறிவிக்க உள்ளனர்.