Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தடைகளை உடைத்தெறிந்த விஜய்யின் மெர்சல்

Sasikala| Last Modified வெள்ளி, 13 அக்டோபர் 2017 (14:06 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ள படம் ‘மெர்சல்’. இதில் விஜய் மூன்று வேடங்களில், மூன்று கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதில் கதாநயகிகளாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன்  நடித்துள்ளனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

 
எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘மெர்சல்’ படத்தினை தடை  விதிக்கக் கோரி தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கடந்த 2014ம்  ஆண்டு அவரது படத்திற்கு ‘மெர்சலாயிட்டேன்’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும், ‘மெர்சல்’ படத்திற்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் டிரெட் மார்க் பெற்றுள்ளதால், தனது படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்டோபர் 6ஆம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர். இதையடுத்து ‘மெர்சல்’ படத்தின் பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ராஜேந்திரன் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கும் தள்ளுபடி  செய்யப்பட்டதால் ‘மெர்சல்’ படத்திற்கு இருந்த தடை முற்றிலுமாக நீங்கியுள்ளதால், படக்குழுவினர் மற்றும் ரசிகர்களும்  மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :