வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 4 நவம்பர் 2016 (12:08 IST)

ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் நடிகர் அருள்நிதி!!

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள்நிதிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. வம்சம், மவுன குரு போன்ற படங்களில் நடித்தவர் அருள்நிதி. நடிகர் அருள்நிதிக்கும் கீர்த்தனாவுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்ததாக அருள் நிதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
தாயும் சேயும் நலம் என்று அருள்நிதி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அருள்நிதி-கீர்த்தனா தம்பதியின் ஆண் குழந்தைக்கு கோலிவுட் திரையுலகினர்களும், திமுக கட்சியினர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.