பைரவா படத்தில் ரசிகர்களுக்கு போனஸ் ட்ரீட்!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:08 IST)
விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பைரவா'. பரதன் இயக்கியிருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 
 
முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார். பைரவா படத்தின் 5 பாடல்கள் கொண்ட ஆல்பத்தை படக்குழு வெளியிட்டிருந்தது. 
 
பாடல்கள் வெளியாகி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ''வரலாம் வா வரலாம் வா பைரவா'' பாடல் ரசிகர்கள் விரும்பிக் கேட்கும் பாடலாக அமைந்தது.
 
இந்நிலையில், பாடலாசிரியர் விவேக் எழுதிய மற்றொரு மெலடி பாடலும் ஆல்பத்துடன் இணைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். 
 
4 பாடல்களுக்கு வைரமுத்துவும், ஒரு பாடலுக்கு அருண்ராஜா காமராஜும் பாடல் வரிகளை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :