செயின் திருடர்களுக்கும் தங்கக் கடத்தலுக்கும் என்ன தொடர்பு?


Caston| Last Modified சனி, 9 ஜனவரி 2016 (11:49 IST)
சென்னையின் செயின் திருடர்களுக்கும், தங்கக் கடத்தலுக்கும், தங்க கள்ள மார்க்கெட்டுக்கும் என்ன தொடர்பு?

 
 
இந்த கேள்விக்கு பதிலாக வருகிறது, பாபி சிம்ஹா நடிக்கும் மெட்ரோ.
 
ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படம் சென்னை மாநகரின் குற்றச் செயல்களை பின்னணியாக வைத்து தயாராகிறது. முக்கியமாக தங்க கள்ள மார்க்கெட்டை கேமரா வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார் ஆனந்த கிருஷ்ணன்.
 
செயின் திருடர்களுக்கும் தங்க கள்ள மார்க்கெட்டுக்கும் உள்ள தொடர்புகளையும் படத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறாராம்.
 
முழுக்க சென்னையில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் மாயா, துளசி ஆகியோரும் நடித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :