வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 30 அக்டோபர் 2014 (11:58 IST)

சுவிட்சர்லாந்தில் அசோக் செல்வன், பிந்து மாதவி டூயட்

நண்பனாக கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த அசோக் செல்வனை தெகிடி ஹீரோவாக்கியது. அவர் தனி ஹீரோவாக நடித்து வரும் அடுத்தப் படம், சவாலே சமாளி.
கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இந்தப் படத்தை இயக்குகிறார். கழுகு கதாநாயகி பிந்து மாதவி ஹீரோயின். சமீபத்தில் அசோக் செல்வன், பிந்து மாதவியின் டூயட் பாடலை சுவிட்சர்லாந்தில் படமாக்கினர். ஜெகன் முக்கிய வேடத்தில் நடிக்கும் சவாலே சமாளியில் நாசர், ஊர்வசி, சுவாதி, கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கின்றனர்.
 
படித்த இரு இளைஞர்கள் வாழ்வில் முன்னேற சந்திக்கும் சவால்கள்தான் படத்தின் கதை. முழுக்க காமெடியில் தயாராகும் இந்தப் படத்தை அருண்பாண்டியன் வழங்க கவிதா பாண்டியனும், ராஜராஜனும் இணைந்து தயாரிக்கின்றனர்.