1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 10 டிசம்பர் 2016 (12:01 IST)

பைக் ரைடராகும் அமலா பால்

அமலா பால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளில் நடிக்கிறார். விவாகரத்து முடிவுக்குப் பின் அவரது கலை வாழ்க்கை வேகம் பிடித்துள்ளது.

 
ஒவ்வொரு படத்திலும் அமலா பாலுக்கு வித்தியாசமான வேடம் அமைவது இன்னொரு ஆச்சரியம். சமீபத்தில் அவர் ஒப்பந்தமான மலையாளப் படமான, அச்சாயன்ஸில், பைக் ரைடராக அமலா பால் வருகிறார்.
 
இந்தப் படத்தில் அமலா பாலின் உடைகள் முதற்கொண்டு அனைத்தும் ட்ரெண்டியாக வித்தியாசமாக இருக்கும், பயணத்தை விரும்பும் பைக் ரைடர் கதாபாத்திரத்தில் அமலா பால் நடிக்கிறார் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் ஜெயராமும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.