பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்திரமுகியான ஜூலி; மகா கேடியாக மாறிய நமீதா!

Sasikala| Last Modified வெள்ளி, 14 ஜூலை 2017 (18:30 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரச்சனைகள் நாளுக்கு நாள் நடந்துவருகின்றது. இதில் இன்று வந்த ப்ரோமோ நமீதா மிகவும் கோபத்தில் உள்ளது போல் தெரிகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரொமோவில் ஜூலியை மீண்டும் டார்கெட் செய்வது போன்று காட்டியுள்ளனர்.

 
 
ப்ரொமோ வீடியோவில் ஆர்த்தி, காயத்ரி, நமீதா என அனைவரும் ஜுலியை பற்றி தான் பேசினார்கள். நமீதா பேசுகையில் இந்த  விவாதத்தில் ‘அவள் கேடி என்றால், நான் மகா கேடி’ என்று நமீதா கூற, இவரும் ஜுலியை ஏதோ செய்ய போகின்றாரோ என தோன்ற வைக்கின்றது.
 
ஜூலி சந்திரமுகி வேஷம்போட்டு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பது போல் காட்டப்பட்டது. இன்றைய  நிகழ்ச்சியில் ஏதோ வில்லங்கம் கண்டிப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விஷயத்தை டார்கெட் செய்து அரங்கேற்றிகின்றனர். இதனை பார்க்கும்போது இவை நிகழ்ச்சி நடப்பதற்காக நடிக்கப்படுகிறதா? அல்லது உண்மைதானா என்ர  சந்தேகம் வரத்தானே செய்கிறது.
 
மீம்ஸ் போட்டு கலைத்துவிட்டனர் நெட்டிசன்கள். ஆனால் டயர்டே ஆகாமல் ஜூலியை டார்கெட் செய்து நடக்கிறது பிக் பாஸ்  நிகழ்ச்சி.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :