பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்: யார் அவர்??


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (18:11 IST)
தெலுங்கில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ராணா கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக சென்றார்.

 
 
ராணா, அவர் நடித்துள்ள ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ படத்தை பிரபலப்படுத்துவதற்காக பிக் பாஸ் வீட்டுக்கு சென்றார். பிக்பாஸ் வீட்டை சுற்றிபார்த்த ராணா, அங்கு ஒரு சில மணிநேரம் போட்டியாளர்களுடன் இருந்தார்.
 
இதே போல் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தமிழ்பட உலகின் முன்னணி நடிகர் அல்லது நடிகை யாரேனும் ஒருவர் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்கு வரவைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
விரைவில் யார் அந்த விருந்தினர் என்ற தகவல் வெளியாகும் என் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :