Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக் பாஸ் ஒரு வடிகட்டிய பொய்?: அம்பலப்படுத்தும் வையாபுரி மனைவியின் ஆடியோ!

பிக் பாஸ் ஒரு வடிகட்டிய பொய்?: அம்பலப்படுத்தும் வையாபுரி மனைவியின் ஆடியோ!


Caston| Last Modified புதன், 12 ஜூலை 2017 (18:23 IST)
தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாப்பிக் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி உள்ளது. ரியாலிட்டி ஷோவான இந்த நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாக மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள நடிகர் வையாபுரி இன்னும் 10 நாட்களில் எலிமினேட் ஆகி வந்துவிடுவார் என அவரது மனைவி பேசுவது போல் ஒரு தொலைப்பேசி உரையாடல் வெளியாகி உள்ளது.
 
அந்த ஆடியோவில், இளைஞர் ஒருவர் தான் ஈரோட்டில் இருந்து பேசுவதாகவும், ஊர் திருவிழா கலை நிகழ்ச்சியில் வையாபுரி கலந்து கொள்ள அவரிடம் பேச வேண்டும் என கூறுகிறார். அதற்கு வையாபுரியின் மனைவி என் கணவர் தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கிறார். அதனால் பேச முடியாது. ஆனால் விரைவில் வெளியேறி வந்துவிடுவார் என்றார்.
 
தொடர்ந்து பேசும் அவர், உங்கள் நிகழ்ச்சி எப்பொழுது என்று கேட்கிறார். அதற்கு அடுத்த மாதம் 20-ஆம் தேதி போல இருக்கலாம் என்று அவர் கூற அடுத்த மாதம் என்றால் அவர் கண்டிப்பாக வந்துவிடுவார். இந்த மாதம் இறுதியிலேயே எலிமினேட் செய்துவிடுவோம் என்று பிக்பாஸ் டீம் கூறியிருக்கிறார் என அந்த ஆடியோவில் உள்ளது.
 
பிக் பாஸ் நிகழ்ச்சி கண்டிப்புடன் கடுமையான விதிமுறைகளின் படி நடக்கிறது என நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் கூறுகிறார். ஆனால் இந்த ஆடியோவில் வையாபுரியின் மனைவி கூறுவதை பார்த்தால் ஏற்கனவே திட்டமிட்டபடி எல்லாம் செயற்கையாக நடப்பது போல உள்ளது. இந்த ஆடியோ வெளியாகி உள்ளது இந்த நிகழ்ச்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :