Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் வீட்டில் நுழைந்து தப்பு செய்துவிட்டேனா; புலம்பிய நடிகை பிந்து மாதவி!

Sasikala| Last Modified திங்கள், 31 ஜூலை 2017 (14:08 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி நுழைந்துள்ளார். இவரது எண்ட்ரியே அதிரடியாக இருந்தது.  பிக் பாஸ் வீட்டிற்குப் போவதற்கு முன், நடிகர் கமல், பிந்து மாதவியிடம், வெளியே நடந்த விஷயங்கள் குறித்து எதுவும் உள்ளே பேசக் கூடாது என்று கூறினார். உறுதி கூறி உள்ளே சென்றிருக்கிறார் பிந்து மாதவி.

 
பிக்பாஸ் வீட்டிற்குள் பல்லக்கில் இருந்து இறங்கிய உடன் அனைவரும் அவரை வரவேற்றனர். காயத்திரி, ஓவியா  உள்ளிட்டவர்களைக் கட்டியணைத்து வரவேற்றனர். நடிகை பிக்பாஸ் வீட்டில் நுழையும்போதே தப்பு செய்துவிட்டனோ என்ற  கேல்வியுடன் நுழைந்தார். நடிகை பிந்து மாதவியிடம் பிக்பாஸ் ஒரு டாஸ்கை கூறுகிறார். அதன்பிறகு ஜூலியுடன் சேர்ந்து  ஓவியா நடனம் ஆடுவதுபோல் காட்டப்பட்டது அதில் ஜூலி தடுமாறி கீழே விழுகிறார். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியும் களை கட்ட ஆரம்பித்து விட்டது. பிக்பாஸ் வீட்டிற்கு வெளியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்த நடிகை பிந்து மாதவி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவுடன் சுதாகரித்து கொள்வாரா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.


இதில் மேலும் படிக்கவும் :