யாரை வேண்டுமானாலும் நாமினேட் செஞ்சுக்கங்க: நாங்க ஓட்டு போட்றதா இல்லை


sivalingam| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (00:51 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா சென்ற பின்னர் அந்த நிகழ்ச்சி சிறிது போரடிக்க ஆரம்பித்துவிட்டது. முழுநேர கட்டிப்புடி தொழில் செய்யும் ஒருவர், கெட்ட வார்த்தைகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து கொண்ட ஒருவர், சாப்பாடு, உடற்பயிற்சி இதை தவிர வேறு எதையும் கண்டு கொள்ளாத ஒருவர், நம்பிய நல்ல உள்ளத்திற்கு மருத்துவ முத்தம் கொடுத்து துரோகம் செய்த ஒருவர், குறை கூறி கொண்டே பிழைப்பு நடத்தும் ஒருவர் என மொத்த பிக்பாஸ் கூட்டமும் நயவஞ்சகத்தின் மொத்த உருவமாக உள்ளது.


 
 
இவர்களில் ரைசா ஒருவர் மட்டுமே சிறிது ஆறுதல் அளிக்கின்றார். ஆனாலும் இவர் ஓவியாவிடம் செய்த லீலைகளை மறக்க முடியாது.
 
இந்த நிலையில் இந்த வாரம் ரைசாவை தவிர அனைவருமே வெளியேறும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் யாரை வேண்டுமானாலும் நீங்க நாமினேட் செய்து கொள்ளுங்கள் நாங்கள் யாருக்கும் ஓட்டு போடப்போதில்லை என்று கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். பிக்பாஸ், புஸ் பாஸ் ஆகிவிட்டதற்கு இதுவொன்றே சாட்சி

webdunia

இதில் மேலும் படிக்கவும் :