Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாரதிராஜாவுக்கே இந்த நிலமையா?


Cauveri Manickam (Murugan)| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (17:06 IST)
தன்னுடைய அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஹீரோவைத் தேடுகிறாராம் பாரதிராஜா. 

 

 
‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்தையும் இயக்காத பாரதிராஜா, படங்களில் நடித்து வருகிறார். ‘பாண்டிய நாடு’ படத்துக்குப் பிறகு குரங்கு பொம்மை’, ‘ஓம்’ என இவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதிலும், ‘ஓம்’ படத்தில் ஹீரோவாக, இளம்பெண்ணை விரும்பும் முதியவர் கேரக்டரில் நடித்துள்ளார்.
 
இந்நிலையில், மறுபடியும் இயக்குநர் அவதாரம் எடுக்க ஆசைப்படுகிறார். அவர் பாணியிலேயே மண்வாசனை வீசும் கிராமத்துக் கதையைப் படமாக்கப் போகிறார். பல பிரபலங்களை சினிமாவில் அறிமுகப்படுத்திய பாரதிராஜா, இந்தப் படத்தில் லிவிங்ஸ்டன் மகளை ஹீரோயினாக அறிமுகப்படுத்தப் போகிறார். ஹீரோ தான் யார் என முடிவு செய்யாமல் தேடி வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :