Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எக்ஸ்குளூஸிவ்: அரசியல் கட்சியில் ஐக்கியமாகும் பரணி?

திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (15:50 IST)

Widgets Magazine

‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமான பரணி, அரசியல் கட்சியில் ஐக்கியமாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. 
‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பார்கள். இந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ… சினிமாக்காரர்களுக்கு நன்றாகவே பொருந்தும். அந்த வரிசையில், ‘பிக் பாஸ்’ மூலம் புகழ்பெற்ற பரணியும் இணைந்துள்ளார்.

‘கல்லூரி’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான பரணி, ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தெரிந்த முகமானார். அதற்குப் பின் சில படங்களில் அவர் நடித்தாலும், சொல்லிக் கொள்கிற மாதிரியாக எதுவும் இல்லை. இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பரணி, அங்கு இருக்கப் பிடிக்காமல் சுவர் ஏறிக்குதித்து தப்பியோட முயன்றார். அத்துடன், அவர்மீது பாலியல் குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன.

எனவே, ‘பிக் பாஸ்’ வீட்டைவிட்டு வெளியேறிய பரணி, அந்தப் புகழை வைத்து ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் ஐக்கியமாகிவிடத் துடிக்கிறார். அதனால், சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதிப் பக்கம் அடிக்கடி இவரைக் காண முடிகிறது. அத்துடன், அரசியல்வாதிகள் மத்தியில் புகழ்பெற்ற நாயர் மெஸ்ஸில் தான் தினமும் மதிய உணவு சாப்பிடுகிறார் பரணி. அவருடன் சில அரசியல்வாதிகளையும் காண முடிகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஓவியாவிற்கு கவுரவத்தை தேடித்தந்த கமலுக்கு நன்றி - நடிகை ஸ்ரீப்ரியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வாயாலேயே உண்மையை வரவழைத்த நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகை ...

news

ஓவியாவுக்கு ஆரவ் கொடுத்த ‘மருத்துவ முத்தம்’ : வைரலாகும் புகைப்படம்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறியதையடுத்து தனது விசாரணையை ஆரம்பித்தார் கமல். இது ...

news

பிக்பாஸ் வீட்டில் புதிய தலைவரான ரைசா; இதனால் தொடரும் பரபரப்பு - வீடியோ!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஓவியா தானாக வெளியேறினார். இதையடுத்து ஓவியாவின் ...

news

இன்று வெளியாகவுள்ள அஜித்தின் விவேகம் படப்பாடல்கள்!!

சிவா இயக்கத்தில் அஜித், அக்‌ஷராஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம், ...

Widgets Magazine Widgets Magazine