பாகுபலி 2 லீக்; தயாரிப்பாளரை மிரட்டியவர்கள் கைது!

Sasikala| Last Modified புதன், 17 மே 2017 (15:12 IST)
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாகுபலி 2 படம் இந்திய பாக்ஸ் ஆபீஸை இன்னும் ஆண்டு  கொண்டிருக்கிறது.

 
 
பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் படத்தின் இந்தி பதிப்பின் இணை தயாரிப்பாளர் கரண் ஜோஹாரை 6 பேர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
 
பாகுபலி 2 இந்தி பதிப்பின் இணை தயாரிப்பாளர் கரண் ஜோஹாரை, எங்களிடம் தரமான பிரிண்ட் உள்ள பைரேட்டட் காபி உள்ளது. நாங்கள் கேட்கும் பணம் தராவிட்டால் அதை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என்று ராகுல் மேத்தா என்பவர் கடந்த  ஏப்ரல் மாதம் 29ம் தேதி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பீகாரில் உள்ள தியேட்டர்  உரிமையாளர் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :