Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியா எந்த சலசலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரி: பரணி புகழாரம்!

ஓவியா எந்த சலசலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரி: பரணி புகழாரம்!

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (17:21 IST)

Widgets Magazine

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஓவியா எந்த சலசலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரி என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தானாக் வெளியேறிய நடிகர் பரணி புகழாரம் சூட்டியுள்ளார்.


 
 
நடிகர் பரணியை பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தவறானவர் என முத்திரை குத்தி அவரை கார்னர் செய்து மொத்தமாக புறக்கணித்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பரணியால் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியவில்லை. இதனால் சுவார் ஏறி எல்லாம் குதித்து வெளியே செல்ல முயற்சித்தார்.
 
இதன் காரணமாக பிக் பாஸ் விதியை மீறியதாக கூறி பரணியை வெளியேற்றினார்கள். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போக மாட்டேன் என கூறியுள்ளார்.
 
மேலும் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் யார் யார் எப்படி என்ற கருத்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு.
 
சினேகன்: ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள.
காயத்ரி: ரொம்ப ஓவரா ஆட்டம் போடுகிறார்.
ஜூலி: இன்னொரு வீட்டுக்கு போன தங்கச்சி.
ரைசா: போலி நிஜமாகாது.
ஆரவ்: கூட்டத்தை கண்டு ஒத்து ஊதுதல்.
ஓவியா: எந்த சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரி.
ஷக்தி: தொட்டிக்குள் வளர்க்கபடும் மரம்.
வையாபுரி: அனுபவம் வாய்ந்த ஜிங்சாக்.
கணேஷ் வெங்கட்ராம்: ஹைபிரிட் முட்டை.
நமீதா: சுத்தம் கழிவறையில் மட்டுமல்ல மனதிலும் இருக்கவேண்டும்.
ஆர்த்தி: மாமியார் உடைச்சா மண் சட்டி, மருமகள் உடைச்சா பொன் சட்டி.
பரணி: தமிழ் பேச தெரிந்த குடும்பத்தில் ஒருத்தன்.
கஞ்சா கருப்பு: தெருவுக்கு ஒருத்தன் இந்த மாதிரி இருப்பான்.
 
இதில் ஓவியாவை மட்டும் பரணி புகழ்ந்து கூறியிருக்கிறார். பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியபோது யாருமே அவரிடம் எதுவும் பேசவில்லை, வழியனுப்பி வைக்கவில்லை. அப்போது ஓவியா மட்டுமே பை பரணி என கூறி அனுப்பி வைப்பார்.
 
பரணி வெளியே வந்த பின்னர் கமல்ஹாசன் அவரிடம் பிக் பாஸ் டைட்டிலை யார் வெற்றி பெறுவார் என கேள்வி கேட்பார். அதற்கு பதில் அளித்த பரணி நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் போது பை பரணி என ஒரு கேட்டது, அந்த குரல் தான் வெற்றி பெறும் என ஓவியாவை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பாரதிராஜாவுக்கே இந்த நிலமையா?

தன்னுடைய அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஹீரோவைத் தேடுகிறாராம் பாரதிராஜா.

news

அடிக்கு மேல் அடி வாங்கும் திலீப்பிற்கு அடுத்த அதிர்ச்சி....

கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மலையாள ...

news

இதுவரை ரூ. 130 கோடி… இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்டு?

விஜய்யின் ‘மெர்சல்’ படத்துக்கு, இதுவரை 130 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது ...

news

ஓவியாவின் லிப்பில் லாக்கான ஆரவ்: வெளியிடுமா உங்கள் அபிமான தொலைக்காட்சி?

கடந்த சில தினங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா ஆரவ் கதல் கதை மெகா சீரியல் ரேஞ்சுக்கு ...

Widgets Magazine Widgets Magazine