Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மொட்ட சிவா கெட்ட சிவா’ தடை செய்யப்படுமா? முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு


sivalingam| Last Modified சனி, 11 மார்ச் 2017 (05:48 IST)
ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் பல்வேறு விதமான தடைகளை சந்தித்து ஒருவழியாக கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆனது. ரிலீஸ் தினத்தில் ராகவா லாரன்ஸ் பெயருக்கு முன்னால் மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் போட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன


 


இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலில் இந்துக்கள் வழிபடும் சிவபெருமானின் பெயரை இழிவுபடுத்தியுள்ளதாகவும் எனவே இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் நேற்று மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியாகி உள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இந்து மத நம்பிக்கையையும், அடையாளங்களையும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு இந்துக்கள் பூஜிக்கும் சிவனின் பெயரை இழிவுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர் சாய்ரமணி, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, படத்தை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுமீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :