வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 21 நவம்பர் 2014 (15:40 IST)

பாலாவின் தாரை தப்பட்டையில் நடிக்கும் இந்திப்பட இயக்குனர்

பாலாவின் தாரை தப்பட்டை என்னும் திரைப்படத்தில் இந்திப்பட இயக்குனர் சதீஷ் கௌசிக் நடிக்கவிருக்கிறார்.

பாலிவுட்டின் முக்கியமான நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் சதீஷ் கௌசிக். பாலாவின் சேது படத்தை இவர்தான் சல்மான், பூமிகா ஆகியோரை வைத்து தேரே நாம் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார். படம் அப்போது டல்லடித்துக் கொண்டிருந்த சல்மானின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது.
 
சதீஷ் கௌசிக்கை தனது தாரை தப்பட்டையில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க வைக்கிறார் பாலா. 
 
சசிகுமார், வரலட்சுமி நடிக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவை இளையராஜா எப்போதோ முடித்துவிட்டார். ஆனால் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில்தான் தொடங்குகிறது. சதீஷ் கௌசிக்ககும் முதல் ஷெட்யூல்டில் கலந்து கொள்கிறார்.
 
தாரை தப்பட்டை இளையராஜாவின் 1000-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.