வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2016 (18:38 IST)

பொங்கலுங்கு மல்லுக்கட்ட தயாரான விஜய், விஷால்

விஜய் நடிப்பில் பைரவா திரைப்படமும், விஷால் நடிப்பில் கத்திச்சண்டை திரைப்படமும் 2017 பொங்கலுக்கு வெளிவர உள்ளன. விஷால், விஜய் படத்தோடு போட்டிப்போட தயாராகிவுள்ளார்.


 

 
பைரவா திரைப்படம் தொடங்கும் போதே, 2017 பொங்கலுக்கு வெளியாகும் என்றி அறிவித்திருந்தனர். பரதன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
 
விஷால் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் கத்தி சண்டை படத்தில் வடிவேலு, சூரி, தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர். சுராஜ் இயக்கத்தில தயாரான கத்திச்சண்டை படப்பிடிப்பு முடிந்த நிலையில், நவம்பர் 17 படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். பணத்தட்டுப்பாடு காரணமாக தற்போது பொங்கலுக்கு படத்தை வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர். அதனால் பொங்கலுக்கு பைரவா, கத்தி சண்டை மோதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.