வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (15:43 IST)

விஜய் யேசுதாஸ், பாபா செகல் - காக்கிச் சட்டை போட்ட பாடகர்கள்

பாடகர்கள் நடிப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை. இளைய தலைமுறையில் நடிகை சங்கீதாவின் கணவரும் பாடகருமான க்ரிஷ் நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். யோசுதாஸின் மகன் விஜய் யோசுதாஸ் மாரி படத்தில் இன்ஸ்பெக்டராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
இவரைத் தொடர்ந்து இன்னொரு பாடகரும் காக்கிச் சட்டை மாட்டியிருக்கிறார். அவர், பாடகர் பாபா செகல்.
 
கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தில் பாபா செகல் இன்ஸ்பெக்டராக வருகிறார். கதைப்படி ஊழல் போலீஸ்.
 
பாடகர்களுக்கு இருக்கும் நடிப்பு ஆர்வம் ஏனோ பாடகிகளுக்கு இல்லை. இருந்திருந்தால் ஒன்றிரண்டு நாயகிகள் சினிமாவுக்கு கிடைத்திருப்பார்கள்.