பாகுபலி இரண்டாம் பாகம்... இரட்டிப்பு செலவு
பாகுபலி இரண்டாம் பாகம்... இரட்டிப்பு செலவு
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதன் முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு 15 கோடிகள் செலவு செய்யப்பட்டது.
நிஜமும், கிராபிக்ஸும் கலந்த அந்த ஆக்ரோஷ போர்க்களக் காட்சி அனைவரையும் சிலிர்க்க வைத்து பாக்ஸ் ஆபிஸில் பண மழையை கொட்ட வைத்தது. பாகுபலி இரண்டாம் பாகத்துக்கு போட்டியாக இருப்பதும் பாகுபலியேதான். முதல் பாகத்தைவிட சிறப்பாக இரண்டாம் பாகம் இருந்தாக வேண்டும்.
பாகுபலி இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸுக்கு 30 கோடிகள்வரை ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்றரை மாதங்கள் இந்த கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் படமாக்குகின்றனர்.
இவ்வளவு பிரமாண்டத்திற்குப் பிறகு அடுத்து என்ன மாதிரி படத்தை ராஜமௌலி இயக்குவார் என்பதுதான் சுவாரஸியமான விஷயம்.