'பாகுபலி 2' ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!


sivalingam| Last Modified திங்கள், 3 ஏப்ரல் 2017 (07:26 IST)
எஸ்.எஸ்.ராஜமெளியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மட்டும் ஒருநாள் முன்னதாகவே வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 


ஏற்கனவே முந்தைய நாள் நடைபெறவுள்ள பிரிமியர் காட்சிகளின் டிக்கெட்டுக்கள் லண்டனில் ஒருசில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட்டதால் இந்த படத்திற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய லண்டன் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஏப்ரல் 27ஆம் தேதியே லண்டனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இங்கிலாந்து-இந்தியா கலாச்சார ஆண்டையொட்டி, லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 27-ஆம் தேதி பாகுபலி-2 திரைப்படன் ரிலீஸ் ஆகவுள்ளதால் லண்டனில் பெருமளவில் வசித்து வரும் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :