வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2015 (11:59 IST)

பிரசாந்த் அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய நடிகை அமண்டா

பிரசாந்த் தெலுங்கு ஹிட்டான ஜுலாயியின் தமிழ் ரீமேக் சாஹசத்தில் நடித்து வருகிறார். அருண்ராஜ் வர்மா இயக்கும் இந்தப் படத்தில் அவரது ஜோடியாக நடிப்பவர், அமண்டா.
 

 
அமண்டாவை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி பேசிய பிரசாந்த், அமண்டா ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். பாலே நடனத்தில் கை தேர்ந்தவர். நடிப்புப் பயிற்சியும் எடுத்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவு பெரிய டயலாக்கை கொடுத்தாலும், அதை ஒரே டேக்கில் ஒகே செய்யும் திறமை அவருக்கு இருக்கிறது. சாஹசம் வெளிவந்த பிறகு அமண்டா பேசப்படும் பிஸி நடிகையாகிவிடுவார் என்றார்.