வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 7 மே 2017 (21:18 IST)

'தளபதி 61' படப்பிடிப்பில் அட்லி மனைவிக்கு என்ன வேலை! தயாரிப்பாளர் புலம்பல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது மாசிடோனியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவருமே தனியாகவே படப்பிடிப்புக்கு வந்திருக்கும் நிலையில் அட்லி மட்டும் மனைவி ப்ரியாவுடன் வந்துள்ளாராம்.



 


இருவரும் லோகேஷன் பார்க்கின்ற சாக்கில் மாசிடோனியாவின் முக்கிய இடங்களை தயாரிப்பாளர் செலவில் சுற்றி பார்ப்பதாக கிசுகிசு கிளம்பியுள்ளது. அதுமட்டுமின்றி மனைவியுடன் அட்லி உள்ள புகைப்படங்களும் ஃபேஸ்புக், டுவிட்டரில் வைரலாகி வருவது விஜய்க்கும் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.

ஏற்கனவெ விஜய்க்கும் அட்லிக்கும் இடையே ஒரு சிறு மனத்தாங்கல் ஏற்பட்டு பின்னர் தயாரிப்பு தரப்பு பஞ்சாயத்து பேசி முடித்துள்ள நிலையில் தற்போது தயாரிப்பு தரப்பும் முணுமுணுக்கும் வகையில் அட்லியின் செயல்பாடு இருப்பதாகவும், அனேகமாக இந்த படம் தான் விஜய்-அட்லி இணையும் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது.