Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அட்லி படத்தில் இரண்டு வேடங்களில் விஜய்...?

Sasikala| Last Modified திங்கள், 13 பிப்ரவரி 2017 (12:04 IST)
அட்லி இயக்கிவரும் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

 
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சென்னை புறநகரில் இந்த மாத ஆரம்பத்தில்  தொடங்கியது. தாடி மீசையுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விஜய். எண்பதுகளில் மதுரை பின்னணியில் இந்தக்  காட்சிகள் படமாக்கப்படுவதாக படக்குழு கூறியுள்ளது.
 
இந்தப் படத்தில் விஜய்க்கு இரண்டு வேடங்கள் எனவும் அதில் ஒன்று போலீஸ் வேடம் எனவும் உறுதி செய்யப்படாத  தகவல்கள் கூறுகின்றன. ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என 3  நாயகிகள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க விஜய்யின் முன்னாள் நாயகி ஜோதிகா ஒப்பந்தமானது குறிப்பிடத்தக்கது. பல்வேறு  காரணங்களால் ஜோதிகா விலகியதையடுத்து அவருக்கு பதிலாக நித்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :