நடிகர்களே உங்க மனைவியை எப்ப கர்ப்பமாக்குவீர்கள்: வித்யா பாலன் தடாலடி!

நடிகர்களே உங்க மனைவியை எப்ப கர்ப்பமாக்குவீர்கள்: வித்யா பாலன் தடாலடி!


Caston| Last Modified சனி, 3 டிசம்பர் 2016 (17:45 IST)
நிரூபர்கள் திருமணமான நடிகைகளிடம் எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்வீர்கள் என கேட்பதற்கு பதிலாக திருமணமான நடிகர்களிடம் போய் உங்கள் மனைவியை எப்பொழுது கர்ப்பமாக்குவீர்கள் என கேளுங்கள் என அதிரடியாக கூறியுள்ளார் நடிகை வித்யா பாலன்.

 
 
பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்த திரைப்படம் இன்று வெளியானது. இந்நிலையில் நடிகை வித்யா பாலன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, எப்பொழுதும் ஏன் என்னுடைய திருமண வாழ்க்கை பற்றியும், நான் எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ள போகிறேன் எனவும் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள் என கேட்டார்.
 
அதே நேரத்தில் திருமணமான நடிகர்களிடம் போய் உங்கள் மனைவியை எப்பொழுது கர்ப்பமாக்குவீர்கள் என கேட்பதற்கு யாரும் இல்லை என்றார். எனக்கென்று ஒரு அடையாளம் உள்ளது. திருமணமானதால் கணவர் சித்தார்த் தான் முக்கியம் என்று நான் கூற வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
 
நான் அவரை மிகவும் நேசிக்கிறேன் ஆனாலும் நான் தான் என் வாழ்வில் முக்கியமான நபர். இதனால் நான் சுயநலவாதி என நினைத்தால் எனக்கு கவலையில்லை என வித்யா பாலன் கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :