அப்ப பாத்த மாதிரியே இருக்கு… அசினின் லேட்டஸ்ட் போட்டோ!

Last Modified ஞாயிறு, 24 ஜனவரி 2021 (15:40 IST)

நடிகை அசினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.

நடிகை அசின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே இந்தியில் உருவான கஜினி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில் நடித்து பாலிவுட்டிலேயே முகாமிட்டார். ஸ்ரீதேவி போல ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

அவருக்கு இப்போது ஒரு குழந்தையும் உள்ளது. திருமண வாழ்க்கைக்கு பிறகு சினிமாவில் நடிக்காத அசின் திரைப்படம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை தவிர்த்தார். இந்நிலையில் அசினின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :