வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (14:17 IST)

சேர்ந்து குடித்த வாசு சரவணனுக்கு யு சான்றிதழ்

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா நடித்துள்ள, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (வி.எஸ்.ஓ.பி.) படத்துக்கு தணிக்கைக்குழு அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்துள்ளது.
ராஜேஷின் படங்கள் என்றால் டாஸ்மாக்குக்கு இலவச விளம்பரம். குடிக்கிற காட்சிகள் நிறைந்திருக்கும். விஎஸ்ஓபி யும் அப்படிதான் உருவாகியிருக்கிறது. படத்தின் டீஸரே, பீர் குடிப்பதை பற்றிதான். வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, ஊரிலுள்ள பாரில் எல்லாம் சோந்தே குடிச்சவங்க என்று பாடல் வரியிலும் போதை தள்ளாடியது.
 
ஆகஸ்ட் 14 படம் திரைக்கு வரும் நிலையில், படம் தணிக்கைக்குழுவுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்தனர். 
 
அதனால், படம் வரிச்சலுகை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளது.