ஆர்யாவின் டார்ஜான் அவதாரம் முடிந்தது

Sasikala| Last Modified வெள்ளி, 2 டிசம்பர் 2016 (13:04 IST)
மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த, கடம்பன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.


 
 
காட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் டார்ஜான் போன்று கட்டுமஸ்தான உடம்புடன் காட்டுவாசியாக ஆர்யா நடித்துள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது. யானைகளுடன் ஆர்யா மோதும் காட்சிகளும் இதில் அடக்கம்.
 
தலக்கோணம் காட்டுப்பகுதியில் நேற்று நடந்த படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழு கூறியுள்ளது. 2017 ஜனவரி அல்லது பிப்ரவரியில் படத்தை திரையில் எதிர்பார்க்கலாம்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :