வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2016 (11:26 IST)

கடம்பனை வெளியிடும் ஆர்யா

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் கடம்பன் படத்தை, ஆர்யாவின், தி ஷோ பீப்பிள் நிறுவனம் வெளியிடுகிறது. 

 
கடம்பன் படத்தில் ஆர்யா காட்டுவாசியாக நடித்து வருகிறார். படத்தின் பெரும்பகுதி வனப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. படத்தின் இறுதிக்காட்சிக்காக விரைவில் படக்குழு பாங்காக் செல்லவுள்ளது. 
 
இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அடுத்த வருட தொடக்கத்தில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.