Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

1450 கிமீ சைக்கிள் ஓட்டும் ஆர்யா


Cauveri Manickam (Abi)| Last Updated: ஞாயிறு, 30 ஜூலை 2017 (10:21 IST)
லண்டனில் நடைபெறும் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்ளும் ஆர்யா, 1450 கிமீ சைக்கிள் ஓட்ட இருக்கிறார்.

 

 
சினிமாவில் நடிப்பது, படம் தயாரிப்பது மட்டுமின்றி, ஹோட்டல் பிசினஸிலும் ஈடுபட்டு வருகிறார். அத்துடன், அவர் முக்கியமாகக் கடைப்பிடிக்கும் விஷயம் பிட்னஸ். ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆர்யா, சைக்கிளிங்கில் ஆர்வம் உள்ளவர். தினமும் அதிகாலையில், அண்ணா நகரில் இருந்து ஈசிஆர் வரை நண்பர்களுடன் சைக்கிளிங் சென்று, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.
 
இந்நிலையில், லண்டனில் நடைபெறும் லண்டன் எடின்பர்க் லண்டன் 2017’ சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார் ஆர்யா. ஜூலை 30ஆம் தேதி தொடங்கும் இந்தப் பந்தயத்தில், 1450 கிலோமீட்டர்களைக் கடக்க வேண்டும்.
 
இந்தப் போட்டியில் ஆர்யா கலந்துகொள்ள, ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ஸ்பான்சர் செய்துள்ளது. தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம், ரஜினி மற்றும் அக்‌ஷய் குமாருக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ள ஆர்யா, ‘2.0’ போஸ்டர் அச்சிடப்பட்ட டி-ஷர்ட் அணிந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :