வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 24 அக்டோபர் 2014 (09:28 IST)

அஜீத் ரசிகராக நடிக்கும் ஆர்யா

யட்சன் படத்தில் நடிகர் அஜீத்தின் ரசிகராக ஆர்யா நடிக்கிறார்.
 
அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் விஷ்ணுவர்தனும், ஆர்யாவும் இணைந்திருக்கும் படம் யட்சன். ஆர்யாவுடன் இன்னொரு ஹீரோவாக விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா நடிக்கிறார். 
இந்தப் படத்தில் ஆர்யா நடிகர் அஜீத்தின் ரசிகராக வருகிறார். இதற்கு முன் சிம்பு அஜீத்தின் ரசிகராக நடித்திருக்கிறார். அஜீத்தின் படம் ஓடும் திரையரங்கில் அவரது கட்அவுட்டுக்கு முன்னால் நின்று தல வாழ்க என்று கோஷமிடுவதுபோல் காட்சி வைக்கப்பட்டிருந்தது.
 
ஆரம்பம் படத்துக்குப் பிறகு விஷ்ணுவர்தனும், ஆர்யாவும் அஜீத் ரசிகர்களாகிவிட்டனர். அதனால்தான் ஆர்யாவின் கதாபாத்திரத்தை அஜீத் ரசிகராக யட்சனில் உருவாக்கியிருக்கிறார்கள்.
 
யுடிவியும், விஷ்ணுவர்தனும் இணைந்து படத்தை தயாரித்து வருகின்றனர்.