வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 24 நவம்பர் 2014 (10:35 IST)

வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க - இது தமன்னா படத்தின் டைட்டிலுங்க

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என்று வித்தியாசமான பெயர்களை தனது படங்களுக்கு வைத்த இயக்குனர் ராஜேஷ் தனது புதிய படத்துக்கு வைத்திருக்கும் பெயர், வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க.
ஆர்யா, தமன்னா நடிக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கியது. ஆர்யாவின் த ஷோ பீப்பிள் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. வழக்கம் போல முக்கியமான வேடத்தில் சந்தானம்.
 
படத்துக்கு வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.