மகிழ் திருமேனியுடன் மீண்டும் இணையும் அருண் விஜய்?


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 14 மார்ச் 2017 (20:05 IST)
இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்க இருக்கிறார் அருண் விஜய்.

 

 
மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘தடையறத் தாக்க’ படத்தில் நடித்தார் அருண் விஜய். அந்தப் படம் ரசிகர்களால் மட்டுமின்றி, சினிமா விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ‘என்னை அறிந்தால்’, ‘குற்றம் 23’ படங்களில் நடித்தார் அருண் விஜய்.
 
சமீபத்தில் வெளியான ‘குற்றம் 23’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதோடு, அருண் விஜய்க்கு நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றுத் தந்திருக்கிறது. எனவே, அடுத்த படமும் நன்றாக அமைய வேண்டும் என்ற ஆசைப்பட்ட அருண் விஜய், மகிழ் திருமேனியை அழைத்து கதை கேட்டுள்ளார். அவர் சொன்ன கதை அருண் விஜய்க்கு பிடித்துவிட்டதாம். விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :