’தளபதி 63’ பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் ஓபன் டாக்...

rahman
Last Modified செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (13:36 IST)
சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி வரும் ஒரு முக்கியமான பேச்சுக்கள் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கும் தளபதி 63 பற்றி தான். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
இப்போதைக்கு ’தளபதி 63’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் பற்றி ரஹ்மான் கூறியுள்ளதாவது;
 
லகான், பீலே போன்ற படங்களில் எனது இசையை அட்லி மிகவும் விரும்புவார். நான் டுயூன் அனுப்பினால் அதை மட்டும் கேட்காமல் என்னுடன் பாடல் வரிகள் ..பாடல் பதிவு ..இசை கலவை... என அனைத்திலும் மிக ஆர்வத்துடன் கலந்து கொள்வார்அட்லி . அப்படி ரசித்தால்தான் பாடலை நன்றாக உருவாக்க உருவாக்க முடியும். என்று தெரிவித்துள்ளார்.
 
’தளபதி 63’ படம் விளையாட்டை மையமாகக் கொண்டாதாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றன.
 
அட்லி  இயக்கிய  மெர்சல் படத்தில்  ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :