Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தெலுங்குப் படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்

Last Updated: புதன், 29 நவம்பர் 2017 (20:07 IST)
‘சயிரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்குப் படத்தில் இருந்து விலகியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘சயிரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்குப் படம் உருவாக இருக்கிறது. 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, கிச்சா சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் பிரமாண்டமாக இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. ஆனால், இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. ஒளிப்பதிவாளராக கமிட்டான ரவிவர்மன் படத்தில் இருந்து விலக, அவருக்குப் பதிலாக ரத்னவேலு கமிட்டானார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானும் படத்தில் இருந்து விலகியிருக்கிறார். ‘ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்கள் நிறைய இருப்பதால், அவற்றுக்கு இசையமைப்பதற்காக இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக’ ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :