வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (13:25 IST)

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே விருது அறிவிப்பு

இந்திய திரையிசைப் பாடகர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர்கள் லதா மங்கேஷ்கரும் அவரது சகோதரி ஆஷா போஸ்லேயும்.


 

 
இவர்கள் இருவரும், மறைந்த தங்கள் சகோதரர் ஹிருதயநாத் மங்கேஷ்கர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை அமைத்து, கடந்த நான்கு வருடங்களாக திரையுலகில் சாதனைப் படைத்தவர்களுக்கு விருது வழங்கி வருகிறார்கள். 
 
இந்த ஆண்டு, விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை இந்த இசை சகோதரிகள் தேர்வு செய்துள்ளனர்.
 
இந்திய திரையிசையை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றதற்காகவும், உலக இசையை இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்காகவும் இந்த விருதை ரஹ்மானுக்கு அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
வரும் 26 -ஆம் தேதி மும்பையில் நடக்கும் விழாவில் ரஹ்மானுக்கு இந்த விருதை லதா மங்கேஷ்கரும், ஆஷா போஸ்லேயும் வழங்குகிறார்கள்.