Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தணிக்கை வாரியத்தில் புதிய தலைவர் நியமனம்; முக்கிய பதவியில் நடிகை கெளதமி!!

Sasikala| Last Modified சனி, 12 ஆகஸ்ட் 2017 (13:00 IST)
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து பஹலாஜ் நிஹானி நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக பிரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய விருது பெற்ற பாலிவுட் பாடலாசிரியர் ஆவார்.

 
 
கடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்து வந்தவர், பிரபல தயாரிப்பாளர் பஹலாஜ் நிஹலானி. இவர் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. இந்நிலையில் பஹலாஜ் நிஹானியை பதவியிலிருந்து நீக்கி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. 
 
மேலும் மத்திய அரசின் முக்கிய பதவிகளில் ஒன்றான தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக, கௌதமி மற்றும் வித்யா பாலன்  நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :