இனி பிக்பாஸ் குறித்து வாய் திறக்க மாட்டேன்; ஆர்த்தியை மிரட்டிய தொலைக்காட்சி?

Sasikala| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (13:36 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரப்பரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகை ஆர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

 
 
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஜூலி நடிப்பதாக கூறி வந்தார் நடிகை ஆர்த்தி. மேலும் ஆரவ் பற்றியும் கருத்து  தெரிவித்துள்ளார். அதில் சிக்குனான் ஆரவ் என்றும், கடலை பார்ட்டி என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இருக்கு இந்த சனிக்கிழமை குறும்படம் இருக்கு... ஆரவின் 'லீலைகள்', புதுசுக்காக பழசை வெறுக்கும் ஆம்பள ஜூலி, பொம்பள சாபம் சும்மா  விடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் கட்டிய வேட்டியை கழட்டிவிட்டு கோவணத்தோட நின்னானாம் என பிக்பாஸ்  நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆரவ் குறித்து நடிகை குண்டு ஆர்த்தி கருத்து பதிவிட்டுள்ளார்.
 
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்த்தி பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து தவறான கருத்தை பரப்பி வருகிறார் என்றும்,  இதனால் கோபமான ஜூலியின் பொற்றோர்கள் விஜய் டிவியில் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்  பிக்பாஸ் பொறுப்பில் உள்ளவர்கள் ஆர்த்தியை அழைத்து எச்சரிக்கை செய்ததாகவும், இதனையடுத்து நடிகை ஆர்த்தி இனி எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று ட்வீட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :