1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 29 மே 2015 (14:05 IST)

கார்த்தி, நாகார்ஜுனா படம் - கௌரவ தோற்றத்தில் அனுஷ்கா?

பிரெஞ்ச் படமான இன்டச்சபிள்ஸின் ரைட்ஸை வாங்கி தமிழ், தெலுங்கில் தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தில்தான் ஸ்ருதி நடிக்க ஒப்புக் கொண்டு தேதி இல்லை என்று விலகிக் கொண்டார். இப்போது தமன்னா நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் சின்ன ஆனால் முக்கியமான பெண் கதாபாத்திரம் ஒன்று உள்ளது. தெரிந்த முகம் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் வம்சி விரும்பியதால் அனுஷ்காவிடம் பேசியுள்ளனர். அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
 
விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.